Face Book Like Button

My Great Web page

Sunday, March 27, 2016

விக்கியின் வலைப்பக்கம் : திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங...

விக்கியின் வலைப்பக்கம் : திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங...: திருவாரூர் பற்றி நமது தளத்தில் ஏற்கனவே வெளிவந்து 3000 வாசகர்கள் மேல் படித்து மகிழ்ந்த  திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் என்ற கட்டுரையின...

விக்கியின் வலைப்பக்கம் : திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

விக்கியின் வலைப்பக்கம் : திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்: திருவாரூரில் தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர்...

Tuesday, March 15, 2016

'Maragatha vadivam' - meaning of the song in Tamil and english

https://youtu.be/XjyXg6zZLqQ
"Madagascar vadivam senkathir veyilaal"
மரகத வடிவம் செங்கதிர் வெயிலால் வாகாய் வாடாதோ"

தகழிக்கூத்தர் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு பிள்ளைத்தமிழ்பாடல் இது.
எம்பெருமான் முருகனைப் பிள்ளையாய், ஒரு சிறு குழந்தையாய் காண்கிறார் புலவர். அவர் புகல்வதை,  புகழ்வதைப் பாருங்கள்!

"மரகதத்தைப் போன்ற பசுமையும், ஒளிவீசும் தன்மையும், குளிர்ச்சியும் கொண்டது உன் திருமேனி  ! இப்படி வெயிலில் ஓடி விளையாடுகிறாயே குழந்தாய்!  உனது குளிர்ச்சி பொருந்திய மரகத வடிவம் கதிரவனின் செங்கதிர்கள் பட்டு வாடிவிடாதோ?  குளிர்ச்சி பொருந்திய நிலவைப் போன்ற உன் அழகிய முகத்தில் மேலும் குளிர்ச்சி துளிர்க்குமாறு,  குளுமையும் மணமும் பொருந்திய வெட்டிவேர் என்று சொல்லப்படுகின்ற வேர்கள் நனைத்த நீரைத் தெளிக்கலாமா? ஆறு திருவுருவம் கொண்ட உன் திருமேனியைத் தம் மலர்க் கரங்களால் அணைத்து  இன்புறும் சரவணப் பெண்கள் இதைக் காணாது போவரோ?  கழுத்தில் அணிந்த மணியும்,  காதில் அணிந்த குண்டலமும், இடுப்பில் அணிந்த அரைஞாணும்  ஒருங்கே சத்தமிட நீ இங்குமங்கும்  ஓடும்போது,  தமது முலைப்பாலை உனக்கு அளித்திட  உன் தாய்மார்கள்  ஆகிய அறுபெண்டிரும்  உன்னைத் தேடமாட்டார்களா?  பெருமையும்  செழிப்பும் மிக்க எவரும் கூட உன்னை திருவடியிணை கண்டு தொழுது இன்புறும்,  அன்றலர்ந்த  செந்தாமரை மலர் போன்ற மதலையே !  நீண்ட சரவணப் பொய்கை மருவும், தீந்தமிழ் போற்றும் தெய்வமாகிய முருகா ! நீ கண்ணுறங்கு !  நான் மறைகளும் போற்றித் துதிக்கும் செந்தில் வேலா ! நீ கண்ணுறங்கு! என்று தாலாட்டைக் கேட்டு நீ கண்ணுறங்கு! "

English meaning:

Maragatha vadivam'

In Tamil 'Pillai Thamizh' is a kind of verse wherein the poet imagines God as a child and praise Him/Her.
One Great Poet by name Thagazi KooTHar, a devotee of Lord Murugan of the famous place called Thiruchendhur in Tamilnadu, wrote  Pillai Thamizh Songs. Following is the meaning of a particular song which begins as "maragatha vadivam Sengkathir veyilAl vaagAy vAdAthO" .  The poet who imagines Lord Murugan as a little child gives a tribute to him in his song , as follows :

"My Lord, Child Muruga ! Your body is so nice, shining like Emerald, and it is very cool. But you are playing in this hot sun.Will not your cool, emerald-like shining body get affected by the hot sun's rays? Your face is so cool and beautiful, like the full moon itself.  Shall I sprinkle over your face, the water in which the roots of Citronella are sunk,  so that the cool face of yours get much more cooled ?  The Six Girls of Saravana Tank, (where you were born), who are treated as your mothers, wouldn't feel like leaving the place without seeing the Six beautiful forms taken by you. Are they not the Blessed ones to embrace your revered beautiful forms of you as six children? When
you run here and there with your beautiful neck chain adorned with bells, your ear rings and bracelet over your hip, everything chime so sweet and rhythmic. Your Six mothers run behind you , longing to feed you milk with their breasts. Won't they search for you?  You are so beautiful  like a 'just blossomed' Lotus.  Even those who are rich in money and knowledge fall at your feet and revere you, praise you and pray for their well-being.  You are the Lord dwelling at the long Saravana Tank. You are the Lord whom the Great Sweet Language TAMIL praise and pamper.  You are the Lord whom, the revered Vedas praise as Sendhil VElan  (Sendhil VElan means 'The Lord who is Red and bright , holding the splendid Spear in hand).
I praise you and pamper you my Child. You please go to sleep soon !  Hearing my song you please go to sleep soon my dear !"

Friday, September 4, 2015

காஞ்சி மஹானின் கருணை மொழிகள்

பரமாசார்யாளின் பவளமணிமாலை 3

வித்தியாசமில்லா வழிபாடு

விஷ்ணுவின் திவ்யரூபத்திலிருந்து வைத்தகண்ணை வாங்கமுடியாமல் எவரும் சொக்கிக்கிடக்க வேண்டியதாயிருக்கிறது. ஸ்ரீ ராமனாகவும் கிருஷ்ண பரமாத்மாவாகவும் அவதரித்தபோதும் இந்த ஜகன்மோகன சௌந்தர்யம் அவரைவிட்டு நீங்காமலே இருந்திருக்கிறது..,..மோகினியாக வந்த நாராயணனின் காருண்ய லாவண்யமும், பரமேசுவரனின் சாந்த ஞானமும் ஒ ன்று சேர்ந்தவுடன் ஒரு மஹாதேஜஸ், ஒரு பெரும் ஜோதி பிறந்தது. இந்த தேஜஸ்ஸே ஐயப்பனாக உருக்கொண்டது.
ஐயன் என்பது 'ஆர்ய' என்பதன் திரிபு. 'ஆர்ய' என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.
ஹரிஹரபுத்ரானாகிய சாஸ்தாவை மதிப்புக்குரியவராக - ஆர்யனாகக் குறிப்பிடுகிறோம். இதிலே வேடிக்கை, பொதுவாகத் தமிழ் நாட்டில் அய்யர்(குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோயில்களில் உள்ள ஸ்வாமிதான் அய்யராக-அய்யனாராக இருக்கிறார். கொஞ்சங்கூட இப்போது பேசப்படுகின்ற இனவித்தியாசங்கள் முன்னே இல்லை என்பதற்கு இதுவே ஓர் அடையாளம்.


பரமாசார்யாள் திருமொழி - 1



'காட்டிக் கொடுக்கும் காலடி'

ஸ்ருஷ்டிகர்த்தனாக ஒரு சுவாமி இருப்பதற்கு நாமே அடையாளம் .நம் ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் அவன் தினுசு தினுசாகப் போட்டுள்ள ரேகை மாதிரி நம்மால் போட முடியுமா? மனிதன்,  தன் கெட்டிக்காரத்தனத்தால் செய்துள்ள காரியங்களைவிட அதிகமாக ஒரு சிறு இலையில் ரேகை போட்டு விசித்திரம் செய்திருக்கிறான் அவன். இதெல்லாம் அந்த மகாதிருடனின் ரேகை அடையாளம். திருடன் பதுங்கியிருப்பது போல் இவனும் பதுங்கியிருப்பவன் தான் ! அவன் குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்றே வேதம் திரும்பத் திரும்பச் சொல்லும்!
நம் இதயம்தான் அந்தக் குகை ! நமக்குள்ளேயே ஒளிந்துகொண்டு நமக்கு வெளியே இத்தனை அற்புதங்களைச் செய்து நம்மை ஆச்சர்யப்படுத்தி தன்னைத் தேடவைக்கிறான் ஸ்வாமி !

--------------------------


பரமாச்சார்யாள் திருமொழி - 2

கண்ணன் பிறந்த தினம்


ஸ்ரீ கிருஷ்ணன்  பகவத்  கீதையில் "உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக்கொண்டிருக்கிறான்" என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலாத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நிழலும் நீரும் தென்பட்டால் அளவில ஆனந்தத்தைத் தருகிறது.. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது .

ஸ்ரீ கிருஷ்ணன் தட்சிணாயனத்தில்  ஆவணி மாதத்தில்ஸ்ரீ கிருஷ்ணா பட்ச அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு  ஒரு வருஷம், தேவர்களுக்கு ஒரு நாள். உத்தராயணம் அவர்களுக்குப் பகல், கிருஷ்ணா பட்சம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ணபட்சம் பித்ருக்களுக்கு இரவாகிறது. அஷ்டமி,  பக்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடு நிசியாகும். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி.இதனால் என்ன ஏற்படுகிறது? ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை ! 
அவனுடைய பெயரும் கிருஷ்ணன்.'கிருஷ்ணன்' என்றால் 'கருப்பு' என்று பொருள். அவனது மேனியும் கருப்பு. ஒரே கருப்பான சமயத்தில் ஆவிர்ப்பவித்த ஞான ஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய்  இன்றும் என்றும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது.அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை விளங்கும்..அவனுடைய கீதை உலகெங்கும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் நிறைந்திருக்கும் ஸ்ரீ பாகவதம், புராணச்ரேஷ்டமாக விளங்குகிறது . உடல் இருக்கும் உயிருக்கு ஒளியாயிருப்பது கண். உலகத்துக்கே ஒளியாயிருப்பவன் கண்ணன். நம் தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்ல; கண்ணனும் கூட.

உள்ளக் கண்ணையும் வெளிக் கண்ணையும் அம்ருததில் மூழ்கடிக்கக் கூடிய வடிவம் அவனுடையது. காதின் வழியாகவும் வேணுவின் சங்கீத  அம்ருதத்தையும், உபதேச சாரமான கீதாம்ருததையும், உட்செலுத்திக் குளிர வைக்கும் அந்தக் கண்ணனே நமது உலகுக்குக் கண். கறுப்பினிடையே விளங்கும் ஒளி. 

ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அனேக விதமான லீலைகளைச்  செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு மேய்க்கும் பையன், குழலூதும் ரசிகன், மல்யுத்தத்தில் தேர்ந்தவன், காளை மாடுகளை அடக்கிக் கட்டுபவன், ராஜ தந்திர நிபுணன், தூது செல்பவன்,சாரதி, துரோபதை குசேலர் போன்ற அனாதர்களை ரக்ஷிப்பவன்,பீஷ்மருக்கு முக்தி அளித்தவன், பீஷ்மருக்கு மாத்திரமல்ல - தன்னைக் கொள்ளும்படியான அம்பைப் பிரயோகித்த வேடனுக்கும் முக்தி கொடுத்தவன் - இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான். உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாக, அநேகவிதமான மனப் போக்கை உடையவர்களாக ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும், சூரனும், திருடனும், ஸ்திரீ லோலனும், பேதையும், உழைப்பாளியும், கிழவனும், குழந்தையும், இறுமாப்புடையவனும், பரோபகாரியும், மனமுருகியவனும், கல்நெஞ்சனும் ஊதாரியும், மூடனும், கல்விமானும், யோகியும், ஞானியுமாகப் பல விதமான மனநிலையை உடையவர்கள் உலகத்தில் அமைந்திருக்கிறார்கள். 

இவர்களில் தீய அம்சமுள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களைக் கொண்ட மகாத்மாவால் ஆகர்ஷிக்க முடியாமலும் போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரசமாயிருக்கும். ஓர் உல்லாச புருஷனுக்கு இன்னொரு உல்லாச புருஷனின் கேளிக்கைகளே சுவாரசியமாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன் நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவர வேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக வேஷம் போட்டான்.  பற்பல போக்குக் கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக் 
கடைத்தேற வைத்த  ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே   பரிபூரணாவதாரம் ! 
                                                 
**************






Saturday, August 23, 2014

ശ്രവണസുഖം: എന്റെ ഗ്രാമം - സി.വി.അബ്ദുല്‍ റഷീദ്‌.

ശ്രവണസുഖം: എന്റെ ഗ്രാമം - സി.വി.അബ്ദുല്‍ റഷീദ്‌.: കവിത:  എന്റെ ഗ്രാമം  രചന:  സി.വി.അബ്ദുല്‍ റഷീദ്‌. കാത്തിരിക്കുന്നു ഞാന്‍ ആ നല്ല നാളിന്റെ അഗമാനതിനായ് മൂകനായി... ആശ്ചര്യ മില്ലാത...

Wednesday, May 7, 2014

Bits of Papers Played Music !!

A few hours of the late evening yesterday, was really like being in heaven to me! I had preserved my Uncle (father’s younger brother late Sri K.Natarajan’s) hand-written copy (written in two small bits of paper about 60 years back) of a song, which was written by Tharangampadi Panchnatham Ayyar. The copy is with me since the last 45 years! You may not believe! That song is a very rare one and I have been waiting to hear the song for a long time. It is a Ragamalika, with one raga in each line! (Arabhimaanam vaiTHaadharippaar enai). I remember having heard the song sung by my uncle himself once and the song is still lingering in my ears! I was so fortunate to get that song in Youtube yesterday when I was searching for songs in Arabhi Raga. I enjoyed hearing the song very beautifully rendered by Sri Neyyattinkara Vasudevan . Lovely renditions! Yet another artist who has nicely rendered the same song is 

Ms.Pantula Rama.
The lovely Ragas used in this song are: Arabhi. Anandhabhairavi, kalyaNi, Hamsadhvani, sArangA, SAmA, mOhanam, lalitha, dharbAr, bhairavi, poorvikalyANi and kamalAmanOhari . Just while hearing the song, I was keeping the photos of the hand-written copy for comparison.
I was so surprised about the knowledge of Music my uncle had; more than that, the interest he had on music. In the copy, he had mentioned all intricacies so perfectly; as to where the Chitta Swaras come, which line is to be sung twice, which Raga resembles which (like the Raga Lalitha in the song resembles Raga Vasantha), which name of the Raga is not clearly referred in the lyrics copied by him, etc. One may remember that those were not the days of tape recorders or CDs. He definitely has had to hear the song sung in some concert and taken down literally. The photographs of the hand-written copy attached, would reveal all these. It was thrilling for me to compare the song when I was hearing the same. For others, it may be felt these are very common, but for me it was really a thrilling time! My Uncle used to discuss with me more about Carnatic Music and Musicians. He used to take me to some important Concerts too. I am reminded of those good old golden days I spent with him about 40 years ago. I owe a lot to my Uncle Late Sri K Natarajan for the little knowledge I have on Music and the interest I have on Music today!

இதயப் பேழைக்குள் ஒரு இசைப் பொக்கிஷம் !

இதயப் பேழைக்குள் இட்டு வைத்திருந்த இசைப் பொக்கிஷம் ஒன்று , இன்று உயிர் பெற்று இன்னிசை பொழியத் தொடங்கியது! கடந்த 45 ஆண்டு காலமாக அந்த இரண்டு காகிதங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன் நான் ! ‘அந்த இரண்டு துண்டுக் காகிதங்களுக்கா இத்தனை மதிப்பும் மரியாதையும் உங்கள் மனதில்' என்று நீங்கள் கேட்கலாம்! ஆம் ! அவை வெற்றுக் காகிதங்களல்ல! அவற்றுக்கு உயிர் உண்டு ! ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு , எனது அருமை சித்தப்பா நடராஜன் அவர்களால் எழுதி வைக்கப்பட்ட 'தரங்கம்பாடி பஞ்சநத அய்யர்' அவர்களால் இயற்றப்பட்ட ஒரு அருமையான பாடல் அது. 'ஆரபிமானம் வைத்தாதரிப்பார் என்னை' என்று தொடங்கும் ஒரு ராக மாலிகை! இந்தப் பாடலை சித்தப்பா பாடி ஒரு முறை கேட்டது இன்னும் நினைவிருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் ஒரு ராகம் மிளிரும் அருமையான பாடல். இப்போது இதை எழுதும்போதும் கூட என் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது அந்தப் பாடல் ! ஒரு இசைக் கட்டுரைக்காக ,'ஆரபி' ராகத்தில் அமைந்த பாடல்களைக் கணினியில் தேடிக் கொண்டிருந்தேன் ! அப்போதுதான் அல்வாத் துண்டு போல் என் கையில் விழுந்தது 'ஆரபிமானம்' பாடல் ! எத்தனையோ காலமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன் நான் ! மிகவும் அபூர்வமான இந்தப் பாடலை வெகு சில பாடகர்களே பாடியுள்ளார்கள் . அதில் ஒன்றுதான் எனக்கு இப்போது கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளைப் புகைப் படம் எடுத்துக் கணினியில் இட்டு வைத்தேன். அதை அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டே பாடலில் லயித்தேன் நான் ! நெய்யாற்றின்கரை வாஸுதேவன் அவர்கள் பாடியுள்ளார் இந்தப் பாடலை ! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது ! இந்தப் பாடலில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் இனிமையான ராகங்கள்: ஆரபி, ஆனந்தபைரவி, கல்யாணி, ஹம்ஸத்வனி, சாரங்கா, சாமா, மோஹனம், லலிதா, தர்பார், பைரவி, பூர்விகல்யாணி, கமலாமனோஹரி. இதே பாடலைப் பாடியுள்ள இன்னொரு பாடகி , விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திருமதி. பந்துல ரமா அவர்கள் ! கேட்டுக்கொண்டிருக்கும் பாடலையும் , எழுத்துப் பிரதியையும் பார்க்கும்போது, சித்தப்பாவின் ஸங்கீத ஞானத்தினைப் பற்றியும், அவருக்கு அதில் இருந்த ஈடுபாட்டினையும் குறித்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனேன் நான் ! எந்த இடத்தில் எந்த வரிகளை இரண்டு முறை பாட வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பு; லலிதா ராகம் 'வஸந்தா' ராகத்தைப் போல் இருக்கும் என்று ஒரு குறிப்பு ! சிட்டஸ்வரங்கள் எங்கெங்கு வருகிறது என்பது பற்றியும், அவை எந்த வரிசையில் இருக்கின்றன என்பது பற்றியும் ஒரு குறிப்பு ! கேட்டுக்கொண்டிருக்கும் பாடலோடு ஒப்பிட்டுக் கொண்டே வந்த நான் அதிசயித்துத் தான் போனேன் !
இணைத்துள்ள, எழுத்துப் பிரதியின் புகைப் படங்களைப் பார்த்தால், மறைந்த என் சித்தப்பா அவர்களின் ஞானம் குறித்து நான் சொன்னது எவ்வளவு உண்மை என்று புலப்படும் ! சித்தப்பாவின் இசை ஞானத்தைக் குறித்து என் தந்தையார் சொல்வது என் நினைவுக்கு வருகிறது : "என் சகோதரி ராஜிக்குப் பாட்டு வாத்தியார் அப்போதுதான் சொல்லிக்கொடுத்து விட்டுப் போன பாடலை , அடுத்த நிமிடத்திலேயே ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்டிவிடும் அளவுக்கு இருந்தது அவனது இசையார்வமும் ஞானமும்" என்பார். பல இசைக் கச்சேரிகளுக்கு என்னைக் கூட்டிச் செல்வார் அவர். அவரால்தான் எனது இசையார்வம் வளர்ந்தது ! இன்றுஎனக்கிருக்கும், அற்ப சொற்ப இசை ஞானமும் அன்னாரின் கொடைதான் ! என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் அவருக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்.