Face Book Like Button

My Great Web page

Monday, June 27, 2016

Please let him not....

World Senior Citizens Day ! :-( Please let him not.... Please let him not walk towards Old Age Home ! Have a little concern! Have a review of the fruitful days of youth you spent with him! Please let him not walk towards Old Age Home! When he had strength he gave all his support to his kith and kins! and now it is his time of need and he needs all your support! Not by way of wealth and valuables ! Never he would ask for it! He just needs a little care, kind and courtesy! Please let him not walk towards Old Age Home! It is all there in an affordable reach of your hands ! Let your mind open to get him all those little wants! Please let him not walk towards Old Age Home! ---K.BALAJI —

பிரிவின் சுமைகள் !


பிரிவின் சுமைகள் !

'கட்டிக் கொடுத்த சோறும்
 சொல்லிக் கொடுத்த பாடமும் 
எத்தனை நாளைக்குக் கூட வரும்
 என்று சொல்வதுண்டு!

என்னைப் பொறுத்த வரையில்,
 என்னை வளர்த்தெடுத்த தாய், நீ
கட்டிக் கொடுத்த சோறு
 இன்னும் என்
கூட வந்து மணக்கிறது.

 நீ சொல்லிக் கொடுத்த
 ஒவ்வாரு சொல்லும்
 இன்றுவரை
 என் நினைவில்
 துணைநின்று
 வழி நடத்திச்
 செல்கிறது!
 இதுதான் உண்மை!

 என்னைப் பெறவில்லை
 என்றாலும்,
சுமந்தாய் நீ மனதில்!
 என் காலில் விஷக்கல்
குத்திய கதைகள் 
இன்னும் மனதில் ரணம்!

ஒவ்வாரு முறையும்
 எனக்காக நீ நடந்த
நடைகள் எத்தனை எத்தனை !

 'இன்னுயிரைத்
 தன்னுயிர் போல் மதித்தல்'
 என்பதை
 உன்வரையில் நீ
உண்மையாக்கிய கதைகள்
 எத்தனை நான் கண்டு,
 மனதில் கொண்டேன் !

 வசைச்சொற்கள்
 உன்வாயிருந்து
 வந்தபோதும்
 அதை நான்
 இசையாகத்தான் கண்டேன்!
 ஏனெனில்
 நான் அறிவேன்,
 அடுத்த கணமே
 அவை உன்
 மனம்விட்டு அகலும்
என்பதை !

அவை என்னைப்
புடம் போட்ட பொன்னாக
மாற்றும் என்பதை!

பிரிவின் சுமைகள்
கனக்கின்றன!
காலம் அதனை
எளிதாக்கும்!
நினைவை இசையாக்கும்
குயிலாய் என்றும்
மனதில் நிறைகின்றாய்
நீ என் தாய் !
நீ என் தாய் !


 --பாலாஜி
04.05.16

Tuesday, May 3, 2016

பிரிவின் சுமைகள்

                           சுமையே சுகம்!

'கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பாடமும் எத்தனை நாளைக்குக் கூட வரும் என்று சொல்வதுண்டு! என்னைப் பொறுத்த வரையில், என்னை வளர்த்தெடுத்த தாய், நீ கட்டிக் கொடுத்த சோறு இன்னும் என் கூட வந்து மணக்கிறது. நீ சொல்லிக் கொடுத்த ஒவ்வாரு சொல்லும் இன்றுவரை என் நினைவில் துணைநின்று வழி நடத்திச் செல்கிறது! இதுதான் உண்மை! என்னைப் பெறவில்லை என்றாலும், சுமந்தாய் நீ மனதில்! என் காலில் விஷக்கல் குத்திய கதைகள் இன்னும் மனதில் ரணம்! ஒவ்வாரு முறையும் எனக்காக நீ நடந்த நடைகள் எத்தனை எத்தனை ! 'இன்னுயிரைத் தன்னுயிர் போல் மதித்தல்' என்பதை உன்வரையில் நீ உண்மையாக்கிய கதைகள் எத்தனை நான் கண்டு, மனதில் கொண்டேன் ! வசைச்சொற்கள் உன்வாயிருந்து வந்தபோதும் அதை நான் இசையாகத்தான் கண்டேன்! ஏனெனில் நான் அறிவேன், அடுத்த கணமே அவை உன் மனம்விட்டு அகலும் என்பதை ! அவை என்னைப் புடம் போட்ட பொன்னாக மாற்றும் என்பதை! பிரிவின் சுமைகள் கனக்கின்றன! காலம் அதனை எளிதாக்கும் நினைவை இசையாக்கும் குயிலாய் என்றும் மனதில் நிறைகின்றாய் நீ என் தாய் ! நீ என் தாய் ! --பாலாஜி
04.05.16

Sunday, April 17, 2016

கவியரசர் கண்ணதாசனின் காவியச் சிந்தனை - ஒரு ஒப்பு நோக்கு



கவியரசர் கண்ணதாசனின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்புநோக்கு
               
பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் !  அத்தகைய பெயர் பெற்றவர்  கவியரசர் கண்ணதாசன்!  அவரது அசரவைக்கும் வரிகளைப்  படித்து அதன் எளிமையில்ஆழ்ந்து போன நாட்கள் கணக்கிலடங்கா ! சில பாடல்களைப் படிக்கும்போது அழகான ஒன்றிரண்டு பழஞ்சொல்லோ, பாடல் வரியோ,  கவிதை நயமோ, காப்பியநயமோ,  நமது நினைவுக்கு வராமல் போகாது! அது கவிஞர்களுக்கே உரித்தான பெருமை! சலுகையும் கூட ! ஆனால் அந்த வரிகளை எந்த அளவுக்கு மேலும் மெருகும்,  அழகும், எளிமையும், ஏற்றமும் கூட்டிப் படைக்க  அவனால் இயல்கிறது என்பதே கவியின் சிறப்பு!  அந்த வகையில் கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்கள் சில, எந்தெந்தப் பழைய வரிகளை நினைவூட்டுகிறது, அந்தப் பழைய பெட்டகத்துக்கு மேலும் எந்த அளவுக்கு அவர் எளிமையும் ஏற்றமும் அளித்து நமக்குத் தருகிறார்  என்பதை அலசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்..  அல்லாது, கவியரசர் திறமையை எந்த வகையிலும் எள்ளுவதோ குறைப்படுத்துவதோ கிடையாது  எமது எண்ணம்!  நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்தத் தொடரை நேயர்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம்!

1.  "நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ" 

படம்: வாழ்க்கைப் படகு
பாடகர்: பி.பி.ஸ்ரீநிவாஸ்

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே                (நேற்று)

உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே
நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்       (நேற்று)

பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே  கனவோ  என்று  வாடினேன்  தனியே நின்று
வண்டு  போல்  வந்தாய்  இன்று  மயங்கினேன்  உன்னைக்  கண்டு
                                                                                                        (நேற்று)

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே  

இந்த அருமையான வரிகளைப் படித்தால் மயங்காதவர் யாருளரோ?  காதலன், தனக்கும் தன காதலிக்கும் உண்டான உறவையும் நட்பையும் குறித்து மனம் வியந்து போற்றுகிறான் ! அன்பு கலந்த நெஞ்சங்களின் பிணைப்பைக் கண்டு வியக்கிறான் !  'நாம் ஒருவரை ஒருவர் கண்டவுடன் நீ என்னுள்ளும் நான் உன்னுள்ளும் ஆகிவிட்டோம்' என்கிறான்! இந்த அழகான வரிகளைப் படிக்கும்போது, ஒரு ஒப்புமைக்குக் 'குறுந்தொகை' கை கொடுக்கிறது.

"யாயும்  ஞாயும்  யார்  ஆகியரோ
எந்தையும்  நுந்தையும்  எம்முறைக் கேளிர்
யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்
செம்புலப்  பெயல்நீர்  போல
அன்புடை  நெஞ்சம் தாம்கலந் தனவே!"

இதன் பொருள் :
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே !

இதே கருத்தைத்தான் கவியரசர் மிக எளிமையாகக் கையாண்டிருக்கிறார் ! 'செம்மண்ணில் நீர்கலந்தாற்போல்' என்ற உவமையை, 'கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே' என்று அவர்தம்  உள்ளம் கலந்து விட்டதைக் குறிப்பிட்டு விட்டார்.

அடுத்தாற்போல், கீழ்க்கண்ட வரிகளைப் பாருங்கள் !

"உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
 விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே"

திருக்குறள் காமத்துப்பாலில் 'குறிப்பறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள குறளை மேலும் எளிமைப்படுத்திக் கவியரசர் கூறியுள்ளது விளங்கும்.

குறள் :
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

இதற்கு மு.வரதராசனார் அவர்களின்  உரை :

'யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கிமெல்லத் தனக்குள் மகிழ்வாள்'

'நோக்காக்கால்' என்ற சொல்லை நகர்த்தி, எதுகை மோனை பிறழாமலிருக்க, 'விண்ணை நான் பார்க்கும்போது' என்று பாங்குறச் சொல்லியிருக்கிறார் ! அனைத்தையும் விட, இந்தக் கருத்தை மேலும் செம்மைப்படுத்தி அடுத்த இர்ண்டு வரிகளைக் கொடுத்துள்ள அழகே அழகு !
"நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்!"

அவள்மேல் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டும் விதத்தில் 'நேரிலே பார்த்துவிட்டால் நிலவு தேய்ந்து போகுமா, பூமுகம் சிவந்து போகுமா' என்றும்  கேட்டு விடுகிறான் !

இறுதி நான்கு வரிகள் பேரழகு. மென்மேலும் கவிதையைச் செம்மைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. '

'உன் முகத்தையும் பார்த்தேன் தாமரை மலரையும் பார்த்தேன்
 கொவ்வையிதழையும் பார்த்தேன் குங்குமச் சிமிழையும் பார்த்தேன்' என்கிறான்  'உன்முன்னால் அவற்றின் சிறப்புக்கு மதிப்பில்லை' என்னும் விதத்தில். 'ஒருவேளை நான் கண்டது கனவோ என்று திகைத்து நிற்குங்காலை மலரைச் சுற்றும் வண்டைப்போல் நீ என்னைச் சுற்றி வந்து நின்றாய்'  என்று சொல்லி மகிழ்கிறான் !

இத்தனை அழகான ஒரு காதலை இவ்வளவு நேர்த்தியாக வேறு எந்தக் கவிஞனால் எழுதிவிட முடியும் ?
-----------------------------------------------------------------------------------------------------------

Sunday, March 27, 2016

விக்கியின் வலைப்பக்கம் : கர்நாடக இசையின் பிறப்பிடம் திருவாரூர் - திருவாரூர...

விக்கியின் வலைப்பக்கம் : கர்நாடக இசையின் பிறப்பிடம் திருவாரூர் - திருவாரூர...: இந்தியாவில் சங்கீதம் என்றால் இரண்டை முக்கியமாக குறிப்பிடுவர். ஒன்று ஹிந்துஸ்தானி சங்கீதம் மற்றொன்று கர்நாடக சங்கீதம். இதில் கர்நாடக சங்கீ...

விக்கியின் வலைப்பக்கம் : திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங...

விக்கியின் வலைப்பக்கம் : திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங...: திருவாரூர் பற்றி நமது தளத்தில் ஏற்கனவே வெளிவந்து 3000 வாசகர்கள் மேல் படித்து மகிழ்ந்த  திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் என்ற கட்டுரையின...

விக்கியின் வலைப்பக்கம் : திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

விக்கியின் வலைப்பக்கம் : திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்: திருவாரூரில் தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர்...

Tuesday, March 15, 2016

'Maragatha vadivam' - meaning of the song in Tamil and english

https://youtu.be/XjyXg6zZLqQ
"Madagascar vadivam senkathir veyilaal"
மரகத வடிவம் செங்கதிர் வெயிலால் வாகாய் வாடாதோ"

தகழிக்கூத்தர் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு பிள்ளைத்தமிழ்பாடல் இது.
எம்பெருமான் முருகனைப் பிள்ளையாய், ஒரு சிறு குழந்தையாய் காண்கிறார் புலவர். அவர் புகல்வதை,  புகழ்வதைப் பாருங்கள்!

"மரகதத்தைப் போன்ற பசுமையும், ஒளிவீசும் தன்மையும், குளிர்ச்சியும் கொண்டது உன் திருமேனி  ! இப்படி வெயிலில் ஓடி விளையாடுகிறாயே குழந்தாய்!  உனது குளிர்ச்சி பொருந்திய மரகத வடிவம் கதிரவனின் செங்கதிர்கள் பட்டு வாடிவிடாதோ?  குளிர்ச்சி பொருந்திய நிலவைப் போன்ற உன் அழகிய முகத்தில் மேலும் குளிர்ச்சி துளிர்க்குமாறு,  குளுமையும் மணமும் பொருந்திய வெட்டிவேர் என்று சொல்லப்படுகின்ற வேர்கள் நனைத்த நீரைத் தெளிக்கலாமா? ஆறு திருவுருவம் கொண்ட உன் திருமேனியைத் தம் மலர்க் கரங்களால் அணைத்து  இன்புறும் சரவணப் பெண்கள் இதைக் காணாது போவரோ?  கழுத்தில் அணிந்த மணியும்,  காதில் அணிந்த குண்டலமும், இடுப்பில் அணிந்த அரைஞாணும்  ஒருங்கே சத்தமிட நீ இங்குமங்கும்  ஓடும்போது,  தமது முலைப்பாலை உனக்கு அளித்திட  உன் தாய்மார்கள்  ஆகிய அறுபெண்டிரும்  உன்னைத் தேடமாட்டார்களா?  பெருமையும்  செழிப்பும் மிக்க எவரும் கூட உன்னை திருவடியிணை கண்டு தொழுது இன்புறும்,  அன்றலர்ந்த  செந்தாமரை மலர் போன்ற மதலையே !  நீண்ட சரவணப் பொய்கை மருவும், தீந்தமிழ் போற்றும் தெய்வமாகிய முருகா ! நீ கண்ணுறங்கு !  நான் மறைகளும் போற்றித் துதிக்கும் செந்தில் வேலா ! நீ கண்ணுறங்கு! என்று தாலாட்டைக் கேட்டு நீ கண்ணுறங்கு! "

English meaning:

Maragatha vadivam'

In Tamil 'Pillai Thamizh' is a kind of verse wherein the poet imagines God as a child and praise Him/Her.
One Great Poet by name Thagazi KooTHar, a devotee of Lord Murugan of the famous place called Thiruchendhur in Tamilnadu, wrote  Pillai Thamizh Songs. Following is the meaning of a particular song which begins as "maragatha vadivam Sengkathir veyilAl vaagAy vAdAthO" .  The poet who imagines Lord Murugan as a little child gives a tribute to him in his song , as follows :

"My Lord, Child Muruga ! Your body is so nice, shining like Emerald, and it is very cool. But you are playing in this hot sun.Will not your cool, emerald-like shining body get affected by the hot sun's rays? Your face is so cool and beautiful, like the full moon itself.  Shall I sprinkle over your face, the water in which the roots of Citronella are sunk,  so that the cool face of yours get much more cooled ?  The Six Girls of Saravana Tank, (where you were born), who are treated as your mothers, wouldn't feel like leaving the place without seeing the Six beautiful forms taken by you. Are they not the Blessed ones to embrace your revered beautiful forms of you as six children? When
you run here and there with your beautiful neck chain adorned with bells, your ear rings and bracelet over your hip, everything chime so sweet and rhythmic. Your Six mothers run behind you , longing to feed you milk with their breasts. Won't they search for you?  You are so beautiful  like a 'just blossomed' Lotus.  Even those who are rich in money and knowledge fall at your feet and revere you, praise you and pray for their well-being.  You are the Lord dwelling at the long Saravana Tank. You are the Lord whom the Great Sweet Language TAMIL praise and pamper.  You are the Lord whom, the revered Vedas praise as Sendhil VElan  (Sendhil VElan means 'The Lord who is Red and bright , holding the splendid Spear in hand).
I praise you and pamper you my Child. You please go to sleep soon !  Hearing my song you please go to sleep soon my dear !"